பேனர்களை அகற்றுவதில் பாரபட்சம்: நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பா.ம.க.வினர் போராட்டம் விருத்தாசலத்தில் பரபரப்பு


பேனர்களை அகற்றுவதில் பாரபட்சம்: நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பா.ம.க.வினர் போராட்டம் விருத்தாசலத்தில் பரபரப்பு
x

விருத்தாசலம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பா.ம.க.வினர் போராட்டம் நடத்தினா்.

கடலூர்

விருத்தாசலம்,

கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமையிலான பா.ம.க.வினர் நேற்று விருத்தாசலம் நகராட்சி அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் விருத்தாசலம் அம்மா உணவகத்தில் ஊழியர்களை வற்புறுத்தி, அசைவ உணவு சமைத்து சாப்பிட்டு வரும் நகராட்சி அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பா.ம.க. பேனர்களை அகற்றுவதுபோல் மற்ற கட்சி பேனர்களை அகற்ற பாரபட்சம் காட்டும் நகராட்சி அதிகாரிகளை கண்டித்து கோஷம் எழுப்பியபடி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் வெங்கடேசன், மாவட்டத் தலைவர் கருணாநிதி, மாவட்ட அமைப்பு செயலாளர் ராஜ், மாவட்டத் துணைச் செயலாளர்கள் வடிவேல், ஏழுமலை, நகர செயலாளர்கள் முருகன், மணிமாறன், நகரத் தலைவர் வக்கீல் சிவசங்கர், ஒன்றிய செயலாளர்கள் தனசேகரன், ஆசைத்தம்பி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டதுடன், பாரபட்சமாக நடக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்களை திரட்டி தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்துவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story