பழங்குடியினரிடம் கலந்துரையாடிய சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினர்
கடையநல்லூர் அருகே பழங்குடியினரிடம் கலந்துரையாடிய சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினர்
தென்காசி
கடையநல்லூர்:
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே வசித்து வரும் பழங்குடியின மக்களிடம் சட்டமன்ற மதிப்பீட்டுக்குழுவினர் கலந்துரையாடினர். கருப்பாநதி அணைப்பகுதியில் கலைமான்நகரில் வசித்து வரும் பழங்குடியின மக்களை சந்தித்து உரையாடினர். அப்போது, அங்கு வசித்து வருபவர்கள் தங்கள் தொழில் சார்ந்தும், குழந்தைகளின் கல்வி சார்ந்தும் பல கோரிக்கைகளை தெரிவித்தனர். இதையடுத்து, அங்குள்ள குழந்தைகள் பலன் பெறும் வகையில் குழந்தைகள் மையம் அமைக்கவும், அவர்களின் தொழில் சார்ந்த பாதுகாப்பு உபகரணங்களை வழங்கவும், அவர்ளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை வழங்கவும் மதிப்பீட்டு குழு தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
Related Tags :
Next Story