50 ஊராட்சி மன்ற தலைவர்களுடன் கலந்துரையாடல் கூட்டம்


50 ஊராட்சி மன்ற தலைவர்களுடன் கலந்துரையாடல் கூட்டம்
x

50 ஊராட்சி மன்ற தலைவர்களுடன் கலந்துரையாடல் கூட்டம்

மயிலாடுதுறை

மயிலாடுதுைற மாவட்டத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 50 ஊராட்சி மன்ற தலைவர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் கலெக்டர் லலிதா தலைமையில் நடந்தது.

கலந்துரையாடல் கூட்டம்

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2-ல் தேர்வு செய்யப்பட்ட 50 கிராம ஊராட்சிகளின் தலைவர்கள் மற்றும் அலுவலர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் லலிதா தலைமை தாங்கி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை சார்பில் செயல்படுத்தப்படும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் குறித்து விளக்கி பேசினார். அப்போது, மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, குத்தாலம், செம்பனார்கோவில், சீர்காழி, கொள்ளிடம் ஆகிய ஒன்றியங்களில் தேர்வு செய்யப்பட்ட 50 ஊராட்சிகளிலும் முகாம்கள் நடத்தி அனைத்து துறைகளின் திட்டங்களும் சென்றடைய உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

முகாம்கள் நடத்த அறிவுறுத்தல்

மேலும் ஊரக வளர்ச்சித்துறையுடன் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, வருவாய்- பேரிடர் மேலாண்மை துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளம்- மீனவர் நலத்துறை உள்ளிட்ட 16 துறைகள் இணைந்து திட்டப்பணிகள் மற்றும் தனி நபர் பயன்படும் வகையிலான பணிகள் தன்னிறைவு அடையவும், முன்னுரிமை அளித்திடவும் 50 ஊராட்சிகளிலும் முகாம்கள் நடத்த வேண்டும் என அலுவலர்களை கலெக்டர் அறிவுறுத்தினார்.

காணொலி மூலம் விளக்கம்

கூட்டத்தில் பங்கேற்ற 50 ஊராட்சிகளின் தலைவர்களுக்கும் துறை வாரியான திட்டங்கள் தொடர்பாக காணொலி மூலம் விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், ஊரக வளர்ச்சி இணை இயக்குனர் முருகண்ணன், வேளாண் இணை இயக்குனர் சேகர், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் பாலாஜி, ஜெயபாலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story