விவசாயிகளுடன் கலந்துரையாடல்
சாத்தான்குளம் அருகே விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே வெங்கடேஸ்வரபுரம் பஞ்சாயத்தில் ஆழ்வார்திருநகரி வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பஞ்சாயத்து தலைவர் பெரியசாமி ஸ்ரீதர் தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட மாநில திட்ட வேளாண்மை துணை இயக்குனர் பழனி வேலாயுதம் மற்றும் வேளாண்மை உதவி இயக்குனர் அல்லிராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நீர் மற்றும் நிலவள திட்ட ஆலோசகர் ஷாஜகான் கலந்துகொண்டு மாதிரி கிராம திட்ட செயல்பாடுகளை ஆய்வு செய்தார். பின்னர். விதை கிராம திட்டம், மாதிரி கிராம திட்டம் பற்றியும் விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.
நிகழ்ச்சியில் உதவி வேளாண் அலுவலர் திருச்செல்வம், தூத்துக்குடி வேளாண் அலுவலர் ரீனா, அட்மா வட்டார தொழில்நுட்ப அலுவலர் மாரியப்பன், பஞ்சாயத்து துணைத் தலைவர் சுந்தர்ராஜ், ஊராட்சி செயலர் மனுவேல், நீர்ப்பாசன சங்க தலைவர் முருகேசன் உள்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். துணை வேளாண்மை அலுவலர் தங்க மாரியப்பன் நன்றி கூறினார்.