ஊராட்சி மன்ற தலைவர்களுடன் கலந்துரையாடல்


ஊராட்சி மன்ற தலைவர்களுடன் கலந்துரையாடல்
x

கல்வராயன்மலையில் ஊராட்சி மன்ற தலைவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.

கள்ளக்குறிச்சி

கச்சிராயப்பாளையம்:

கல்வராயன்மலையில் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ஊராட்சி மன்ற தலைவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் தலைமை தாங்கினார். மாவட்ட பழங்குடியினர் நல அலுவலர் இளங்கோவன், பழங்குடியினர் நல துணை இயக்குனர் வைரமணி, ஒன்றியக்குழு தலைவர் சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கவுன்சிலர் அலமேலு சின்னத்தம்பி வரவேற்றார். இதில் மாநில பழங்குடியினர் நல முதன்மை இயக்குனர் அண்ணாதுரை கலந்துகொண்டு ஊராட்சி மன்ற தலைவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசுகையில், கல்வராயன்மலைக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என்றார். நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி பொறியாளர் அருண்ராஜா, அருண்பிரசாத், ஒன்றியக்குழு துணை தலைவர் பாஷாபி ஜாகிர்உசேன், வேங்கோடு ஊராட்சி மன்ற தலைவர்கள் கல்யாணிகிருஷ்ணன், அர்ச்சனா லட்சுமணன், ரத்தினம், செல்வராஜ், அண்ணாமலை, ஆண்டி, குப்புசாமி மற்றும் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் சின்னத்தம்பி, கிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர்கள், செயலாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story