கேரளாவில் பறவை காய்ச்சல் பரவல் எதிரொலி:குமரி எல்லையில் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிப்பு


கேரளாவில் பறவை காய்ச்சல் பரவல் எதிரொலி:குமரி எல்லையில் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிப்பு
x
தினத்தந்தி 29 Oct 2022 12:15 AM IST (Updated: 29 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் பறவை காய்ச்சல் பரவுவதை தொடர்ந்து தடுப்பு நடவடிக்கையாக குமரி எல்லையில் வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

கன்னியாகுமரி

களியக்காவிளை:

கேரளாவில் பறவை காய்ச்சல் பரவுவதை தொடர்ந்து தடுப்பு நடவடிக்கையாக குமரி எல்லையில் வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

பறவை காய்ச்சல் பரவல்

கேரள மாநிலத்தில் பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இதையடுத்து தமிழகத்தில் பறவை காய்ச்சல் பரவாமல் இருக்க தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி குமரி- கேரள எல்லை பகுதியான படந்தாலுமூடு சோதனைச் சாவடியில் கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கேரளாவில் இருந்து கோழி, முட்டை, கோழி தீவனம் போன்றவற்றை ஏற்றி வந்த லாரிகளை தடுத்து நிறுத்தி அவை எங்கிருந்து கொண்டு வரப்படுகின்றன என்ற விவரங்கள் ேசகரிக்கப்பட்டன.

கிருமி நாசினி தெளிப்பு

மேலும், வாகனங்களை தீவிர பரிசோதனை செய்து அவற்றின் டயர்களில் கிருமி நாசினி தெளித்த பின்னரே அனுமதிக்கப்பட்டன.

இதுபோல் கேரளாவில் இருந்து வந்த கார், வேன் உள்ளிட்ட பிற வாகனங்களையும் தடுத்து நிறுத்தி கிருமி நாசினி உள்ளிட்ட தடுப்பு மருந்துகள் தௌிக்கப்பட்டன.

இந்த பணியில் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் முருகேசன், கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் சந்திரசேகர், கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் எட்வர்ட் தாமஸ், மருத்துவ குழுவினர் ஜெப கிளாரி, டால்பின் பெனடிக், கால்நடை ஆய்வாளர் நாககுமாரி, கால்நடை பராமரிப்பு உதவியாளர் ஜெபக்குமார் ஆகியோர் மேற்கொண்டனர்.


Next Story