அங்கன்வாடி ஊழியர் பணியிடை நீக்கம்


அங்கன்வாடி ஊழியர் பணியிடை நீக்கம்
x

புதுக்கோட்டையில் அங்கன்வாடியில் உணவு சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டதையடுத்து அங்கன்வாடி ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை:

28 குழந்தைகளுக்கு சிகிச்சை

புதுக்கோட்டையில் நகராட்சி அலுவலகம் பின்புறம் தெற்கு சந்தைப்பேட்டையில் உள்ள அங்கன்வாடி மையத்தில் நேற்று மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகள் பலருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. சில குழந்தைகளுக்கு உடல் உபாதை ஏற்பட்டது. இதில் அவர்கள் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மொத்தம் 28 பேர் சிகிச்சை பெற்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து நேற்று அனைவரும் வீடு திரும்பினர்.

பணியிடை நீக்கம்

குழந்தைகள் அனைவரும் நலமாக இருப்பதால், அவர்கள் 'டிஸ்சார்ஜ்' ஆனதாக மருத்துவமனை வட்டாரத்தில் தெரிவித்தனர். உணவு ஒவ்வாமையினால் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் அந்த அங்கன்வாடி மைய ஊழியர் மீனா என்பவரை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் கவிதாராமு உத்தரவிட்டார். அதன்படி அவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.


Next Story