முதனை ரேஷன்கடை விற்பனையாளர் பணியிடை நீக்கம்
முறைகேட்டில் ஈடுபட்ட முதனை ரேஷன்கடை விற்பனையாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
கடலூர்
கடலூர்,
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள முதனையில் ரேஷன் கடை இயங்கி வருகிறது. இந்த கடை முதனை வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று முதனை ரேஷன் கடையில் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் ரேஷன் கடை விற்பனையாளர் சூர்யகலா, பெரும் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து முறைகேட்டில் ஈடுபட்ட விற்பனையாளர் சூர்யகலாவை பணியிடை நீக்கம் செய்து கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story