நாலுமாவடி பஞ்சாயத்து துணைத்தலைவர் பதவி நீக்கம்
நாலுமாவடி பஞ்சாயத்து துணைத்தலைவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
தூத்துக்குடி
தென்திருப்பேரை:
ஆழ்வார்திருநகரி யூனியன் நாலுமாவடி பஞ்சாயத்து 7-வது வார்டு உறுப்பினராக வெற்றி பெற்ற ராஜேஷ், பின்னர் பஞ்சாயத்து துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் ராஜேஷ் வேட்புமனு தாக்கல் செய்தபோது பிரமாண பத்திரத்தில், கொலை வழக்கில் 7 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்ததை மறைத்து 2 ஆண்டு சிறை தண்டனை பெற்றதாக தவறுதலாக சமர்ப்பித்து உள்ளதாக அழகேசன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவின்பேரில், ராஜேஷின் வார்டு உறுப்பினர் பதவி, துணைத்தலைவர் பதவி ஆகியவற்றை தகுதிநீக்கம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இதற்கிடையே நாலுமாவடியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கொலைமிரட்டல் விடுத்ததாக சுரேஷ் மீது குரும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
Related Tags :
Next Story