போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்


போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்
x

கரிவலம்வந்தநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் சங்கரநாராயணன். இவர் மீது வாகன சோதனையின் போது ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு முடிவடையாமல் உள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பாக தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. அலுவலகத்துக்கு பரிந்துரை செய்தார்.

இதையடுத்து சங்கரநாராயணனை பணியிடை நீக்கம் செய்து நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் நேற்று உத்தரவிட்டார். இந்த மாத இறுதியில் சங்கரநாராயணன் ஓய்வு பெற இருந்தது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story