சிறை வார்டன் பணியிடை நீக்கம்


சிறை வார்டன் பணியிடை நீக்கம்
x

வேலூரில் பொறுப்பு ஏற்ற நாளில் சிறை வார்டன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

வேலூர்

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியை சேர்ந்தவர் பாண்டியம்மாள் (வயது 65). இவரது கணவர் கண்ணன். இவர்களுக்கும் மதுரை சிறையில் வார்டனாக பணியாற்றிய செந்தில்குமாருக்கும் பணம் தொடர்பான பிரச்சினை இருந்து வந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் மதுரை ஜெய்ஹிந்த்புரம் போலீசார் சிறை வார்டன் செந்தில்குமார் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து மதுரையில் இருந்து செந்தில்குமார் வேலூர் சிறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் அவர் நேற்று பொறுப்பேற்றார். அவர் மீது இருந்த புகார் காரணமாக பொறுப்பேற்ற உடனே அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இதற்கான உத்தரவை ஜெயில் சூப்பிரண்டு அப்துல் ரகுமான் பிறப்பித்துள்ளார்.


Next Story