கூடுதல் விலைக்கு மதுவிற்ற விற்பனையாளர் பணியிடை நீக்கம்


கூடுதல் விலைக்கு மதுவிற்ற விற்பனையாளர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 30 July 2023 1:30 AM IST (Updated: 30 July 2023 1:30 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டி அருகே கூடுதல் விலைக்கு மதுவிற்ற விற்பனையாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

தேனி

ஆண்டிப்பட்டி அருகே கண்டமனூரில் அரசு டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இங்கு மதுபான வகைகளை அரசு நிர்ணயம் செய்த விலையை விடவும் ஒரு பாட்டிலுக்கு ரூ.10 வீதம் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட கலெக்டர் ஷஜீவனாவுக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க மாவட்ட டாஸ்மாக் மேலாளர் தனலட்சுமிக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி மாவட்ட மேலாளர் தனலட்சுமி, கண்டமனூர் டாஸ்மாக் கடையில் திடீர் ஆய்வு செய்தார்.

அப்போது அங்கு ஒரு பாட்டிலுக்கு ரூ.10 வீதம் கூடுதல் விலைக்கு மதுவிற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. மதுபான பிரியர்களும் மாவட்ட மேலாளரிடம் இந்த கூடுதல் விலை வசூலிப்பது தொடர்பாக நேரிலும் தெரிவித்தனர். இதையடுத்து அந்த டாஸ்மாக் கடையின் விற்பனையாளர் முத்தையாவை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட மேலாளர் உத்தரவிட்டார். இதுபோன்று மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கூடுதல் விலைக்கு மதுவிற்பனை செய்தால் மக்கள் புகார் தெரிவிக்கலாம் என்றும் மாவட்ட மேலாளர் தனலட்சுமி தெரிவித்தார்.


Next Story