செவிலியர் பணியிடை நீக்கம்


செவிலியர் பணியிடை நீக்கம்
x

குழந்தையை விற்ற விவகாரத்தில் செவிலியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி அருகே மாரநேரி கிராமத்தை சேர்ந்த பாண்டீசுவரன்-பஞ்சவர்ணம் தம்பதியின் 4-வது பெண் குழந்தை ரூ.40 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக குழந்தையின் பெற்றோர் மற்றும், மாரநேரி ஆரம்ப சுகாதார நிலைய நர்சு அஜிதா, கிராம செவிலியர் முத்துமாரியம்மாள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் குழந்தை விற்பனை விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக கூறப்படும் கிராம செவிலியர் முத்துமாரியம்மாள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்பந்த நர்சாக பணியாற்றிய அஜிதா மீது நடவடிக்கை எடுக்க துறை ரீதியாக பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது.


Next Story