உல்லத்தி ஊராட்சி மேற்பார்வையாளர் பணியிடை நீக்கம்


உல்லத்தி ஊராட்சி மேற்பார்வையாளர் பணியிடை நீக்கம்
x

திட்ட பணிகளை சரிவர செய்யாததால் உல்லத்தி ஊராட்சி மேற்பார்வையாளரை பணியிடைநீக்கம் செய்து கலெக்டர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

நீலகிரி

ஊட்டி

திட்ட பணிகளை சரிவர செய்யாததால் உல்லத்தி ஊராட்சி மேற்பார்வையாளரை பணியிடைநீக்கம் செய்து கலெக்டர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

பசுமை வீடு திட்டம்

நீலகிரி மாவட்டம் ஊட்டி ஒன்றியத்திற்கு உட்பட்டது உல்லத்தி ஊராட்சி. இங்குள்ள அம்மநாடு பழங்குடியினர் கிராமத்தில் 2020-2021-ம் ஆண்டின் பசுமை வீடு திட்டத்தின் கீழ் சாலனி என்பவருக்கு ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்ட உத்தரவு வழங்கப்பட்டது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் அம்ரித் கடந்த டிசம்பர் மாதம் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது வீட்டின் பணி ஜன்னல் மட்டத்திற்கு கட்டப்பட்டு இருந்தது. இதனை விரைவில் கட்டி முடிக்குமாறு பணி மேற்பார்வையாளர் பொன் மொழியிடம் அறிவுறுத்தப்பட்டது.

பணியிடை நீக்கம்

இந்தநிலையில் மேலும், இந்த பணிகள் குறித்து கடந்த வாரம் மாவட்ட கலெக்டர் அம்ரித் மீண்டும் ஆய்வு செய்தார். அப்போது, கூரை மட்ட அளவிற்கு மட்டுமே பணி நடைபெற்று இருந்தது. மேற்கண்ட பணியானது ஜன்னல் மட்டத்தில் இருந்து 6 மாத காலம் கடந்தும் கூரை அளவிற்கு மட்டுமே பணி நடைபெற்று உள்ளது.

இதேபோன்று பல்வேறு திட்டப் பணிகளில் முன்னேற்றம் இல்லாமலும், பணிகள் முடிக்கபடாமலும் இருப்பது ஆய்வில் தெரியவந்தது. மேலும் இதுகுறித்து பலமுறை அவருக்கு அறிவுறுத்தப்படும் அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.

எனவே தமிழ்நாடு குடிமைப்பணிகள் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகள்படி பொன்ெமாழியை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார். இந்த சம்பவம் ஊட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் பணிகளை சரிவர செய்யாததால் கடந்த சில நாட்களுக்கு முன்பு பர்லியார் ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story