போலீசாருக்கான இடமாறுதல் கலந்தாய்வு


போலீசாருக்கான இடமாறுதல் கலந்தாய்வு
x

வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீசாருக்கான இடமாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது.

வேலூர்

வேலூர்

வேலூர் மாவட்ட காவல்துறையில் 3 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரிந்து வரும் காவலர்களை இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி வேறு இடத்திற்கு மாற்றலாகி செல்பவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டது. அவர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு மாவட்ட சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தலைமை தாங்கினார்.

இதில் 140 போலீசார் கலந்து கொண்டனர். அவர்கள் தங்களுக்கு விருப்பமுள்ள 3 இடங்களை குறிப்பிட்டு இருந்தனர். அதில் ஒரு இடத்தை தேர்வு செய்து அதற்கான பணி மாறுதல் ஆணை அவர்களிடம் வழங்கப்பட்டது.


Next Story