வந்தவாசி ஏரியில் கொட்டப்பட்ட கழிவுகள் அகற்றம்
வந்தவாசி ஏரியில் கொட்டப்பட்ட கழிவுகள் அகற்றப்பட்டன.
திருவண்ணாமலை
வந்தவாசி
வந்தவாசியில் காஞ்சீபுரம் சாலை பகுதியில் பாதிரி ஏரி அமைந்துள்ளது.
இந்த ஏரியில் கோழி, மாடு கழிவுகள் மற்றும் குப்பைகளை கொட்டப்பட்டுள்ளதை கலெக்டர் முருகேஷ் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இந்த செய்தி தினத்தந்தி நாளிதழில் வெளியிட்டதன் எதிரொலியாக ஏரியில் உள்ள கழிவுகளை நகராட்சி நிர்வாகம் உடனடியாக அப்புறப்படுத்தி வருகிறது.
மேலும் வந்தவாசி நகராட்சி ஆணையாளர் மங்கையர்கரசன் தலைமையில் கோழி மற்றும் மாடு இறைச்சி வியாபாரிகளை அழைத்து கழிவுகளை முறைப்படி அகற்ற வேண்டும்.
ஏரியில் கொட்டும் நபர்களை கண்டறிந்து அபராதம் மற்றும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என அறிவுரை கூறினார்.
Related Tags :
Next Story