பழனிசெட்டிபட்டியில் மதுபான பாரை அப்புறப்படுத்த வேண்டும்


பழனிசெட்டிபட்டியில் மதுபான பாரை அப்புறப்படுத்த வேண்டும்
x

பழனிசெட்டிபட்டியில் மதுபான பாரை அப்புறப்படுத்த வேண்டும் என்று சிவசேனா கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்

தேனி

சிவசேனா கட்சியின் மாநில துணை செயலாளர் குரு.அய்யப்பன் தலைமையில் நிர்வாகிகள் சிலர் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அன்பழகனிடம் அவர்கள் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், "பழனிசெட்டிபட்டி முத்துநகரில் தனியார் மதுபான பார் அமைந்துள்ளது. இதன் அருகில் வங்கியும், மகளிர் விடுதியும் உள்ளது. மாலை நேரத்தில் மதுபிரியர்கள் அதிக அளவில் வருவதால், பெண்கள் அந்த வழியாக நடந்து செல்ல அச்சம் அடைகின்றனர். எனவே, இந்த மதுபான பாரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.


Next Story