2 தனியார் பஸ் ஊழியர்களிடையே தகராறு


2 தனியார் பஸ் ஊழியர்களிடையே தகராறு
x

பயணிகளை ஏற்றிச்செல்வதில் போட்டாபோட்டி 2 தனியார் பஸ் ஊழியர்களிடையே தகராறு காட்டுமன்னார்கோவில் அருகே பரபரப்பு

கடலூர்

காட்டுமன்னார்கோவில்

சிதம்பரத்தில் இருந்து நேற்று முன்தினம் மாலை 2 தனியார் பஸ்கள் பயணிகளை ஏற்றிக் கொண்டு காட்டுமன்னார்கோவில் நோக்கி புறப்பட்டது. அந்த 2 பஸ்களை ஓட்டி வந்த டிரைவர்கள் காட்டுமன்னார்கோவில் அடுத்த எள்ளேரி பேருந்து நிறுத்தம் வந்தபோது, பஸ்களை நடுரோட்டில் நிறுத்தி அங்கு நிற்கும் பயணிகளை யார் முதலில் ஏற்றிச் செல்வது தொடர்பாக போட்டா போட்டி போட்டனர். இதனால் 2 தனியார் பஸ்களின் ஊழியர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த பஸ்களில் வந்த பயணிகள் பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களை சமாதானம் செய்தனர். இதையடுத்து 2 பஸ்களும் அங்கிருந்து புறப்பட்டு சென்றன. இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story