திண்டிவனம் பகுதியில் இரு தரப்பினர் தகராறு; 5 பேர் கைது
திண்டிவனம் பகுதியில் இரு தரப்பினர் தகராறில் 5 பேர் கைது செய்யப்பட்டனா்.
திண்டிவனம்,
திண்டிவனம் அடுத்த விழுக்கம் காலனி பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் மகன் மணிகண்டன்(வயது 26). இவர் நண்பர் அஜித்குமார் உள்ளிட்ட சிலருடன் விழுக்கம் மெயின்ரோட்டில் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது பள்ளிக்குளம் கிராம பகுதியை சேர்ந்த சின்னசாமி மகன் அய்யனார்(27) வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். விழுக்கம் மெயின்ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது, அங்கு நின்று கொண்டிருந்த மணிகண்டன் தரப்பினருக்கும் அய்யனாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மணிகண்டன் உள்பட 4 பேரும் சேர்ந்து அய்யனாரை தாக்கியதாக தெரிகிறது. இதுபற்றி அறிந்த அய்யனார் தரப்பினர், அங்கு வந்து தகராறில் ஈடுபட்டதால் இருதரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இதுகுறித்து இருதரப்பினரும் கொடுத்த புகாரின்பேரில் 9 பேர் மீது ரோஷனை போலீசார் வழக்குப்பதிவு செய்து அய்யனார், அருண்(26), காமராஜ்(28), சிலம்பரசன்(22), எல்லப்பன்(26) ஆகிய 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.