பண்ருட்டியில்வாடகை கார்கள் நிறுத்துவதில் இருதரப்பினரிடையே பிரச்சினை :போலீசார் சமரசம் செய்தனர்


பண்ருட்டியில்வாடகை கார்கள் நிறுத்துவதில் இருதரப்பினரிடையே பிரச்சினை :போலீசார் சமரசம் செய்தனர்
x
தினத்தந்தி 25 Sept 2023 12:15 AM IST (Updated: 25 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பண்ருட்டியில் வாடகை கார்கள் நிறுத்துவதில் இருதரப்பினரிடையே பிரச்சினை ஏற்பட்டதால், அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று சமரசம் செய்து போலீசார் அனுப்பினர்.

கடலூர்


பண்ருட்டி,

பண்ருட்டியில் கடலூர் ரோட்டில் வாடகை கார்கள் நிறுத்தும் இடம் உள்ளது. இந்த இடத்தில் கார்களை நிறுத்திக்கொள்வதில் இரு தரப்பை சேர்ந்த டிரைவர்கள் இடையே கடந்த சில நாட்களாக பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் மாலை இவர்களுக்கிடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. இதுபற்றி அறிந்த பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இருதரப்பினரிடமும் விசாரித்தனர். பின்னர் அங்கிருந்த கார் டிரைவர்கள் அனைவரையும் பண்ருட்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தை

அப்போது ஒரு தரப்பினர் தங்களது கார்களை மட்டும் தான் அங்கு நிறுத்த வேண்டும் என்று தெரிவித்தனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதையடுத்து வழக்கமாக கார்கள் எவ்வாறு நிறுத்தப்பட்டு வந்ததோ அதே போன்று நிறுத்திக்கொள்ள வேண்டும். மோதல் போன்ற சம்பவங்களில் ஈடுபடக்கூடாது. மேலும் பண்ருட்டி தாலுகா அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணவும் போலீசார் தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story