பூ வியாபாரம் செய்வதில் தகராறு; 4 பேர் கைது


பூ வியாபாரம் செய்வதில் தகராறு; 4 பேர் கைது
x

பூ வியாபாரம் செய்வதில் தகராறில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் கோவில் வாசல் முன்பு புஷ்பவல்லி (வயது 28), மதன் (30) ஆகியோர் பூ வியாபாரம் செய்து வருகிறார்கள். இவர்களுக்குள் வியாபாரம் செய்வதில் போட்டியால் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் திடீரென்று இருதரப்பினரும் 2 கோஷ்டிகளாக தகராறு செய்து தாக்கிகொண்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக திருப்பரங்குன்றம் போலீசில் புஷ்பவல்லி கொடுத்த புகாரின்பேரில் மதன், ராஜபாண்டியை போலீசார் கைது செய்தனர். அதேபோல் ராஜபாண்டி கொடுத்த புகாரின் பேரில் புஷ்பவல்லி, சரவணன், கணேசன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சரவணன், கணேசன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.


Related Tags :
Next Story