நிலப்பிரச்சினை தொடர்பாக தகராறு; 5 பேர் மீது வழக்கு


நிலப்பிரச்சினை தொடர்பாக தகராறு; 5 பேர் மீது வழக்கு
x

நிலப்பிரச்சினை தொடர்பான தகராறு தொடர்பாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கரூர்

தோகைமலையில் உள்ள வேதாசலபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 42). இவரது வீட்டின் அருகே வசித்து வருபவர் ராமலிங்கம் (58). இவர்கள் இருவருக்கும் தங்களது வீட்டின் அருகே உள்ள நிலத்தில் சந்து (இடைவெளி) குறித்து முன்விரோதம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த முன்விரோதம் காரணமாக இருதரப்பினருக்கும் இடையே சம்பவத்தன்று மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் இருதரப்பினரும் ஒருவருக்கொருவர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து கொண்டனர். இதுகுறித்து இருதரப்பினரும் தனித்தனியாக தோகைமலை போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில், இருதரப்பை சேர்ந்த ராமலிங்கம், சக்திவேல், பாலமுருகன், முருகன், பிரேமா ஆகிய 5 பேர் மீது தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story