நிலப்பிரச்சினை தொடர்பாக தகராறு; 6 பேர் மீது வழக்கு
நிலப்பிரச்சினை தொடர்பாக தகராறு; 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கரூர்
கடவூர் வட்டம், மாவூரை சேர்ந்தவர் சிவகாமி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த செம்பன் என்பவருக்கும் நிலப்பிரச்சினை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் சம்பவத்தன்றும் இரு குடும்பத்தினருக்கும் இடையே மீண்டும் முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதில் 2 பேரும் காயம் அடைந்தனர். இதுகுறித்து இருதரப்பினரும் தனித்தனியாக பாலவிடுதி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் இருதரப்பினரையும் ேசர்ந்த 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story