பழக்கடைக்கு பூட்டு போட்டதில் தகராறு


பழக்கடைக்கு பூட்டு போட்டதில் தகராறு
x

பழக்கடைக்கு பூட்டு போட்டதில் தகராறு தொடர்பாக ஒருவரை போலீசார் தேடி வருகிறார்கள்

திருநெல்வேலி

பேட்டை:

நெல்லையை அடுத்த பேட்டை வி.வி.கே.தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் மகேந்திரன் (வயது 40). இவர் பேட்டை ரொட்டிக்கடை ஸ்டாப் அருகே வாடகை கட்டிடத்தில் பழ வியாபாரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடையின் உரிமையாளர் கட்டிடத்தை வேறு ஒரு நபருக்கு விற்று விட்டார். இந்த நிலையில் அவரது கடைக்கு பேட்டை சர்க்கரை விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த லட்சுமணன் என்பவர் மேல்பூட்டு போட்டதாக மகேந்திரன் பேட்டை போலீசில் புகார் செய்தார். இந்த தகராறு குறித்து நீதிமன்ற வழிகாட்டலின்படி வழக்கு பதிந்த பேட்டை போலீசார் லட்சுமணனை தேடி வருகின்றனர்.


Next Story