பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு


பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு
x

ரிஷிவந்தியம் அருகே பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு கணவன், மனைவி உள்பட 4 பேர் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி

ரிஷிவந்தியம்

ரிஷிவந்தியம் அருகே உள்ள லா.கூடலூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னதம்பி மகன் பழனிவேல்(வயது 37). கரும்பு வெட்டும் தொழிலாளியான இவருக்கும், கீழ்பாடி கிராமத்தை சேர்ந்த ராமசாமி மகன் ஞானபிரகாஷ் என்பவருக்கும் கரும்பு வெட்டும் கூலித்தொகை சம்பந்தமாக பணம் கொடுக்கல், வாங்கல் இருந்துள்ளது. சம்பவத்தன்று இரவு பழனிவேல் மற்றும் அவரது தம்பி அய்யப்பன் ஆகியோர் கீழ்பாடிக்கு சென்று ஞானபிரகாசிடம் தங்களுக்கு வரவேண்டிய கரும்பு வெட்டு கூலி பணத்தை கேட்டுள்ளனர். அப்போது பணத்தை தர மறுத்த ஞானபிரகாஷ் மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து பழனிவேலுவை திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் இது குறித்த புகாரின் பேரில் ஞானபிரகாஷ், இவரது உறவினர்கள் சின்னத்தம்பி மகன் ராமசாமி, மகாலிங்கம் மகன் நாகராஜ், இவரது மனைவி கனிபாக்கியம் ஆகிய 4 பேர் மீதும் ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story