பெட்ரோல் பங்க் பெண் ஊழியரிடம் தகராறு


பெட்ரோல் பங்க் பெண் ஊழியரிடம் தகராறு
x

பெட்ரோல் பங்க் பெண் ஊழியரிடம் தகராறு

கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழி:

ஆரல்வாய்மொழி தெற்கு பெருமாள்புரத்தை சேர்ந்தவர் பாலசுந்தரம். இவருடைய மகள் ஈஸ்வரி (வயது 33). இவர் அந்த பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் வேலை செய்து வருகிறார். நேற்று மதியம் ஒருவர் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போட்டுள்ளார். அதற்கு பணம் கேட்டதற்கு அந்த நபர் ஈஸ்வரியை தகாத வார்த்தைகள் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து ஈஸ்வரி ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்தார். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து அந்த நபரை பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். விசாரணையில் அவர் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த சரவணன் (வயது 34) என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


Next Story