மது வாங்கி கொடுப்பதில் தகராறு; 2வாலிபர்களுக்கு கத்திக்குத்து
தூத்துக்குடி தாளமுத்துநகரில் மது வாங்கி கொடுப்பதில் ஏற்பட்ட தகராறில் 2 வாலிபர்களை கத்தியால் குத்தி கொலைமிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி தாளமுத்துநகரில் மது வாங்கி கொடுப்பதில் ஏற்பட்ட தகராறில் 2 வாலிபர்களை கத்தியால் குத்தி கொலைமிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தொழிலாளி
தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தை சேர்ந்தவர் முனியசாமி. இவருடைய மகன் பூமாரியப்பன் (வயது 29). தொழிலாளி. இவருக்கும், மேட்டுப்பட்டியை சேர்ந்த முத்தையா மகன் கார்த்திக் (24) என்பவருக்கும் இடையே மது வாங்கிக் கொடுப்பதில் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த கார்த்திக், தனது நண்பர் மேட்டுப்பட்டியை சேர்ந்த இசக்கிமுத்து மகன் முனீசுவரன் (22) என்பவருடன் சேர்ந்து பூமாரியப்பன் மற்றும் அவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த பழனி மகன் இசக்கிகுமார் (29) ஆகியோரை கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்து உள்ளனர்.
2 பேர் கைது
இது குறித்து பூமாரியப்பன் அளித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் வழக்கு பதிவு செய்து கார்த்திக், முனீசுவரன் ஆகிய 2 பேரையும் கைது செய்தார்.
மேலும், தூத்துக்குடி அருகே உள்ள தட்டப்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர் பாலன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
பணம் கேட்டு மிரட்டல்
அப்போது, செக்காரக்குடி பஞ்சாயத்து அலுவலகம் அருகே சென்ற தொழிலாளி ஒருவரை பணம் கேட்டு மிரட்டியதாக கீழ செக்காரக்குடியை சேர்ந்த ஒளிமுத்து மகன் முருகன் (22) என்பவரை பிடித்தனர். இது குறித்து தட்டப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து முருகனை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.