அன்னதானம் வழங்கிய போது தகராறு
முத்துப்பேட்டை தர்காவில் அன்னதானம் வழங்கிய போது தகராறு : 2 பேர் கைது
திருவாரூர்
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டையை அடுத்த ஜாம்புவானோடையில் பிரசித்திபெற்ற சேக்தாவூது ஆண்டவர் தர்கா உள்ளது. இங்கு அதே பகுதியை சேர்ந்த செய்யதுஅகமது(வயது59) வேண்டுதலுக்காக அன்னதானம் வழங்கிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வைரவன்சோலை கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் (46), தெற்கு வெள்ளாதிக்காடு கிராமத்தை சேர்ந்த காமராஜ் (48) ஆகிய இருவரும் அன்னதானம் வழங்கிக்கொண்டிருந்த செய்யதுஅகமதுவிடம் கூடுதல் உணவு கேட்டு தொல்லை செய்தும் அவரை தாக்கி கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து செய்யதுஅகமது முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியன், காமராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story