விதிமுறைகளை பின்பற்றாத 7 வாகனங்கள் தகுதி நீக்கம்


விதிமுறைகளை பின்பற்றாத 7 வாகனங்கள் தகுதி நீக்கம்
x

கூடலூரில் அரசு விதிமுறைகளை பின்பற்றாத 7 பள்ளி வாகனங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, நோட்டீஸ் வழங்கப்பட்டது.

நீலகிரி

கூடலூர்,

கூடலூரில் அரசு விதிமுறைகளை பின்பற்றாத 7 பள்ளி வாகனங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, நோட்டீஸ் வழங்கப்பட்டது.

பள்ளி வாகனங்கள் ஆய்வு

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து தனியார் பள்ளி வாகனங்கள் அரசு விதிமுறைகளை பின்பற்றி இயக்கப்படுகிறதா? என சோதனை நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 345 பள்ளி வாகனங்கள் உள்ளது. இதில் முதல் கட்டமாக 164 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. கூடலூர் பகுதியில் 90 பள்ளி வாகனங்கள் உள்ளன. இதையொட்டி கூடலூர் முஸ்லிம் அனாதை இல்ல பள்ளி மைதானத்தில் 49 வாகனங்கள் நேற்று ஆய்வு செய்யப்பட்டது. ஆர்.டி.ஓ. சரவண கண்ணன், போலீஸ் துணை சூப்பிரண்டு குமார், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பிரபாகரன் ஆகியோர் வாகனங்களை ஆய்வு செய்தனர்.

தகுதி நீக்கம்

அப்போது அவசரகால வழி, தீயணைப்பு கருவிகள் செயல்படாமல் இருப்பது உள்பட அரசின் விதிமுறைகளை முறையாக பின்பற்றாத 7 வாகனங்கள் கண்டறியப்பட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. முன்னதாக போலீஸ் துணை சூப்பிரண்டு குமார் தனியார் பள்ளி வாகன டிரைவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

பள்ளி வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு கருவி, தீயணைப்பு கருவிகள், அவசரகால வழி மற்றும் முதலுதவி பெட்டிகள் கண்டிப்பாக இருக்க வேண்டும். தொடர்ந்து குழந்தைகள் வாகனங்களில் பாதுகாப்பாக பயணம் செய்யும் வகையில் பராமரிப்பு பணி மேற்கொண்டு இருக்க வேண்டும். இதற்காக அரசு 21 விதிமுறைகளை வகுத்து உள்ளது. அதன்படி விதிமுறைகளை முறையாக பின்பற்றவில்லை எனில் தகுதி நீக்கம் செய்யப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story