கால்வாயை சொந்த பணத்தில் தூர்வாரிய கிராம மக்கள்


கால்வாயை சொந்த பணத்தில் தூர்வாரிய கிராம மக்கள்
x
தினத்தந்தி 5 Jun 2023 12:15 AM IST (Updated: 5 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கால்வாயை சொந்த பணத்தில் கிராம மக்கள் தூர்வாரினர்.

ராமநாதபுரம்

நயினார்கோவில்,

பரமக்குடி தாலுகா நயினார் கோவில் யூனியன் பாண்டியூர் வைகை ஆற்றில் இருந்து மும்முடிசாத்தான் கிராமத்திற்கு செல்லும் வரத்து கால்வாய் கடந்த 30 வருடங்களாக தூர்வாரப்படவில்லை. இதனால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் கண்மாய்களில் தண்ணீர் நிரப்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தங்கள் பகுதியில் கண்மாய்கள் இருந்தும் வானம் பார்த்த பூமியாகவே காட்சியளிக்கிறது. இதனால் நெல், மிளகாய், பருத்தி, கடலை முதலிய விவசாயங்கள் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வந்தனர். இது சம்பந்தமாக மும்முடிசாத்தான் ஊராட்சி தலைவர் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திற்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் கோரிக்கைகளை அளித்து வந்தனர். இதனை கண்டுகொள்ளாத அதிகாரிகளால் ஏமாற்றம் அடைந்த பொதுமக்கள் மும்டிச்சாத்தான் ஊராட்சி மன்ற தலைவர் விஜயன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஏற்பாட்டில் மும்முடிச்சாத்தான் பொதுமக்களின் சொந்த நிதியில் கால்வாய்களை தூர்வாரினர். பொதுமக்கள் மற்றும் எந்திரம் மூலம் கால்வாய் தூர்வரப்பட்டது. இதனால் வரும் காலங்களில் அப்பகுதி விவசாயிகள் பயன்பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.


Next Story