கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் வினியோகம்
கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை விண்ணப்பங்களை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
சென்னை
சென்னையில் உள்ள கொளத்தூர் கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023-2024-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்களை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு நிரந்தர கட்டிடம் கட்டுவதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகின்றோம். இக்கல்லூரியின் மூலம் பயன்பெறுபவர்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மாணவர்கள். அவர்களுக்கு தரமான கல்வி வழங்கப்படுவது முதல்-அமைச்சருக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார்.
இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் ஹரிப்பிரியா, இணை ஆணையர் சுதர்சன், எவர்வின் பள்ளித்தாளாளர் புருஷோத்தமன், கல்லூரி செயலாளர்- துணை ஆணையர் அரிகரன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story