பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வினியோகம்


பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வினியோகம்
x
தினத்தந்தி 16 April 2023 12:15 AM IST (Updated: 16 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது.

நீலகிரி

கூடலூர்,

1944-ம் ஆண்டு ஏப்ரல் 14-ந் தேதி மும்பை துறைமுகத்தில் 66 தீயணைப்புத்துறை வீரர்கள் உயிரிழந்தனர். இதன் நினைவாக ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் தீ தொண்டு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், குன்னூர் தீயணைப்பு நிலையங்களில் தீ தொண்டு வாரம் நேற்று முன்தினம் கடைபிடிக்கப்பட்டது. கூடலூர் நிலையத்தில் அலுவலர் மார்ட்டின் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் பணியின் போது உயிர் நீத்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து நினைவு அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ்களை வழங்கினர். அதில் வீட்டில் சமையல் கியாஸ் சிலிண்டரை பயன்படுத்தி விட்டு உடனடியாக ரெகுலேட்டரை அணைக்க வேண்டும். பள்ளிக்கூடங்கள் செயல்படும் போது அவசரகால வழி மற்றும் நுழைவு வாயிலை திறந்து வைக்க வேண்டும். தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக வெளியேறுவது குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.


Next Story