குற்றச்சம்பவங்களை தடுக்க விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம்
குற்றச்சம்பவங்களை தடுக்க விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது.
மண்ணச்சநல்லூர் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் அறிவுரைப்படி, சப்-இன்ஸ்பெக்டர் அருண்குமார், ஏட்டு மகேஷ் மற்றும் போலீசார் மண்ணச்சநல்லூரில் புதிதாக விஸ்தரிக்கப்பட்டுள்ள அழகு நகர், அண்ணாமலை நகர், பூமிநாதன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கினர். மேலும் அதில், வெளியூர்களுக்கு செல்லும்போது போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். குடியிருப்பு பகுதிகளில் புதிதாக வரும் நபர்கள் மற்றும் சந்தேகப்படும்படி சுற்றித் திரியும் நபர்கள் பற்றி உடனடியாக போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தால், அடுத்த சில நிமிடங்களில் ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நடவடிக்கை எடுப்பார்கள். வசதி படைத்தவர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் தங்களது வீடுகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். குற்ற சம்பவங்களை தடுக்க போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அறிவுறுத்தினர்.