கும்பகோணத்தில் லாரி மூலம் குடிநீர் வினியோகம்


கும்பகோணத்தில் லாரி மூலம் குடிநீர் வினியோகம்
x

எந்திர கோளாறு காரணமாக கும்பகோணத்தில் லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.

தஞ்சாவூர்

கும்பகோணம்;

கும்பகோணம் 13-வது வார்டில் குடிநீர் வினியோகத்தில் ஏற்பட்ட எந்திர கோளாறு காரணமாக நேற்று லாரி மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டது.கும்பகோணம் சோலையப்பன் தெரு பகுதியில் குடிநீர் குழாய் மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் எந்திர கோளாறு காரணமாக சில தினங்களாக தண்ணீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே மாநகராட்சி சார்பில் சோலையப்பன் தெருவில் டேங்கர் லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.


Next Story