பாதயாத்திரை பக்தர்களுக்கு ஒளிரும் குச்சிகள் வினியோகம்
வேடசந்தூர் பகுதியில், பாதயாத்திரை பக்தர்களுக்கு ஒளிரும் குச்சிகள் வினியோகம் செய்யப்பட்டது.
திண்டுக்கல்
பழனி முருகன் கோவிலில் நாளை (சனிக்கிழமை) தைப்பூச திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக பழனிக்கு வந்த வண்ணம் உள்ளனர். இரவில் நடந்து செல்லும் இவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் நிலை ஆங்காங்கே நடந்து வருகிறது.
இதைக்கருத்தில் கொண்டு போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து துறை சார்பில் பக்தர்களுக்கு ஒளிரும் குச்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி வேடசந்தூரில் பாதயாத்திரை பக்தர்களுக்கு ஒளிரும் குச்சிகள் வினியோகம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு மோட்டார் வாகன ஆய்வாளர் சண்முகஆனந்த் தலைமை தாங்கி, பாதயாத்திரை பக்தர்களுக்கு ஒளிரும் குச்சிகளை வழங்கினார்.
மேலும் பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் சாலையோரத்தில் நடந்து செல்ல வேண்டும். இரவு 9 மணிக்கு மேல் நடந்து செல்வதை தவிர்த்து ஓய்வெடுக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
Related Tags :
Next Story