மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வினியோகம்


மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வினியோகம்
x
தினத்தந்தி 10 March 2023 12:15 AM IST (Updated: 10 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குமரியில் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வினியோகம்

கன்னியாகுமரி

நாகர்கோவில்

தமிழகம் முழுவதும் பொது தேர்வு எழுதும் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் நிறைவடைந்துள்ளன. இதைத் தொடர்ந்து பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வருகிற 13-ந் தேதி தொடங்குகிறது. பிளஸ்-1 மாணவர்களுக்கு 14-ந் தேதி தேர்வுகள் தொடங்குகின்றன.

இதையடுத்து பொதுத் தேர்வு எழுத உள்ள பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு ஹால் டிக்கெட் நேற்று வினியோகிக்கப்பட்டது. குமரி மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது. நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு ஹால் டிக்கெட்டை பள்ளி தலைமை ஆசிரியை தயாபதி நளதம் வழங்கினார்.


Next Story