மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வினியோகம்


மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வினியோகம்
x

மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வினியோகம் செய்யப்படுகிறது.

கரூர்

கரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து நாளை (திங்கட்கிழமை) திறக்கப்படுகிறது. இதையொட்டி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆணைப்படி பள்ளி கல்வித்துறையின் சார்பில் கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து கரூர் மாவட்டத்தில் உள்ள 129 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 6 மற்றும் 7-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா நோட்டு புத்தகம் மற்றும் கணித உபகரணங்கள் வாகனங்கள் மூலம் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து நாளை பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகளுக்கு இவை வினியோகிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story