இயற்கை வேளாண் முறையில் விளைந்த வாழைப்பழங்கள் மாணவர்களுக்கு வினியோகம்


இயற்கை வேளாண் முறையில் விளைந்த வாழைப்பழங்கள் மாணவர்களுக்கு வினியோகம்
x
தினத்தந்தி 30 Aug 2023 1:00 AM IST (Updated: 30 Aug 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

இயற்கை வேளாண் முறையில் விளைந்த வாழைப்பழங்கள் மாணவர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது.

திருவாரூர்

திருவாரூர் மாவட்டம் தில்லைவிளாகம் அருகே மேலநம்மங்குறிச்சி கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் மாணவர்கள் ஒன்று சேர்ந்து தோட்டம் அமைத்துள்ளனர். மாணவர்கள் தங்கள் பிறந்தநாளில் பள்ளிக்கு ஒரு பழக்கன்று வழங்கும் வழக்கமும் உள்ளது. மேலும் பள்ளி தோட்டத்தில் ரசாயன உரங்களின்றி இயற்கை வேளாண் முறையில் காய்கறி மற்றும் பழங்கள் விளைவிக்கப்படுகிறது. இந்த நிலையில் அங்கு விளைந்த வாழைப்பழங்கள் மாணவர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டன. அப்போது பள்ளியின் தலைமை ஆசிரியர் மகாதேவன், இயற்கை வேளாண் முறையில் விளையும் காய்கறிகள் மற்றும் பழங்களால் கிடைக்கும் நன்மை குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளித்தார்.


Next Story