விழுப்புரம் மாவட்டத்தில்பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்று வினியோகம்


விழுப்புரம் மாவட்டத்தில்பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்று வினியோகம்
x
தினத்தந்தி 1 Aug 2023 12:15 AM IST (Updated: 1 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்று வினியோகம் செய்யப்பட்டது.

விழுப்புரம்


தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு நிதிஉதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவ- மாணவிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வை கடந்த மார்ச் மாதம் 13-ந் தேதி முதல் ஏப்ரல் 3-ந் தேதி வரை எழுதினர். இத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் அனைவருக்கும் அசல் மதிப்பெண் சான்றுகள் ஜூலை 31-ந் தேதி முதல் அந்தந்த பள்ளிகள் மற்றும் தேர்வு மையங்களின் மூலம் வழங்கப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்திருந்தது. அதன்படி மறுகூட்டல், மறு மதிப்பீடு முடிவுகள் உள்பட அசல் மதிப்பெண் சான்றுகள், மதிப்பெண் பட்டியல்கள் நேற்று முதல் வினியோகம் செய்யும் பணி தொடங்கியது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை 21,566 மாணவ- மாணவிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதியதில் 19,552 மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில் தேர்வுத்துறை அறிவிப்பின்படி விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் அனைவரும் நேற்று தாங்கள் படித்த பள்ளிகளுக்கு நேரில் சென்று அசல் மதிப்பெண் சான்றுகளை பெற்றுச்சென்றனர். அதேபோல் தனித்தேர்வர்கள், தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்தின் மூலமாக அசல் மதிப்பெண் சான்றுகளை பெற்றனர். விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சசிகலா, அசல் மதிப்பெண் சான்றுகளை வழங்கினார்.


Next Story