இடையற்காட்டில்கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம்


இடையற்காட்டில்கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம்
x
தினத்தந்தி 10 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-11T00:17:04+05:30)

இடையற்காட்டில்கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை கூட்டுறவு சங்க தலைவர் என். சின்னத்துரை வழங்கினார்.

தூத்துக்குடி

ஆறுமுகமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்துக்கு உட்பட்ட மாரமங்கலம், கொட்டாரக்குறிச்சி, ஆறுமுகமங்கலம், பெருங்குளம், இடையற்காடு உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆயிரத்து 601 ரேஷன்கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி இடையற்காட்டில் நடந்தது. நிகழ்ச்சிக்கு ஆறுமுகமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் என். சின்னத்துரை தலைமை தாங்கி கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார். தொடர்ந்து மாரமங்கலம் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையிலும் பொங்கல் பரிசு தொகுப்பை அவர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பொது விநியோக திட்டம் கூட்டுறவு சார் பதிவாளர் பொன்மாரி, கூட்டுறவு செயலாளர் ஐயம்பாண்டி, கூட்டுறவு மேலாளர் முத்து கிருஷ்ண குமார், காசாளர் ஆனந்தராமன், மாரமங்கலம் பஞ்சாயத்து தலைவர் முருகேசுவரி, கடை விற்பனையாளர்கள் அருள்ராஜ், செந்தி பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story