குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வினியோகம்


குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வினியோகம்
x

மேல்பாடி ஊராட்சியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வினியோகம் செய்யப்பட்டது.

ராணிப்பேட்டை

பொங்கல் பண்டிகைக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு சார்பில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு மற்றும் ரூ.1,000 ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படுகிறது. கூட்டத்தை தவிர்க்க ரேஷன் அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்படுகிறது. அதில் பொருட்கள் வழங்கப்படும் தேதி மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். அதன்படி ஒருநாளைக்கு 200 பேருக்கு பொங்கல்பரிசு தொகுப்பு வழங்கப்படும்.

மேல்பாடி கூட்டுறவு சங்கம் மூலம் செயல்படும் 13 ரேஷன் கடை விற்பனையாளர்கள் மூலம் 3,628 குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது.


Next Story