நெல் விதைகள் வினியோகம்
செங்கோட்டையில் விவசாயிகளுக்கு மானியத்தில் நெல் விதைகள் வினியோகம்
தென்காசி
செங்கோட்டை:
தென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தமிழ்மலர் உத்தரவின்பேரில், தென்காசி வேளாண்மை உதவி இயக்குனர் கனகம்மாள் ஆலோசனையின்படி, பிசான நெல் சாகுபடிக்கான கோ-51 மற்றும் ஆடுதுறை-45 சான்று பெற்ற நெல் விதைகள் செங்கோட்டை, அச்சன்புதூர், ஆய்க்குடி வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. எனவே செங்கோட்டை வட்டாரத்தைச் சேர்ந்த புளியரை, புதூர், கற்குடி, செங்கோட்டை, மேக்கரை அச்சன்புதூர், இலத்தூர் ஆய்க்குடி, சாம்பவர் வடகரை, கிளாங்காடு விவசாயிகள் நெல் விதையை மானியத்தில் பெற்று பயனடையுமாறு செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலர் ஷேக் முகைதீன் கூறியுள்ளார்.
மேலும் மானியத்தில் நெல் விதைகளை விவசாயிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
Related Tags :
Next Story