அரசு பள்ளியில் குழந்தைகளுக்கு வைட்டமின் மருந்து வினியோகம்


அரசு பள்ளியில் குழந்தைகளுக்கு வைட்டமின் மருந்து வினியோகம்
x
தினத்தந்தி 23 Dec 2022 12:15 AM IST (Updated: 23 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

அளக்குடி கிராமத்தில் அரசு பள்ளியில் குழந்தைகளுக்கு வைட்டமின் மருந்து வினியோகம் செய்யப்பட்டது

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே அளக்குடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு 'வைட்டமின் ஏ' திரவ மருந்து வினியோகம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் பாலு மாணவர்களுக்கு வைட்டமின் ஏ திரவ மருந்தை வழங்கினார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கொளஞ்சியன் முன்னிலை வகித்தார். இதில் 6 மாதங்கள் முதல் 60 மாதங்கள் வரை உள்ள குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவ மருந்து வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கிராம சுகாதார செவிலியர் இந்திரா, ஆசிரியர்கள் சுந்தரி, ஆஷா, மக்களை தேடி மருத்துவ பணியாளர் தேன்மொழி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story