மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பம் வினியோகம்


மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பம் வினியோகம்
x

மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பம் வினியோகத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தாமலேரிமுத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் கட்டேரி, அம்மையப்பன் நகர், பக்கிரிதக்கா, திரியாலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் 15 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளில் 8,300 குடும்ப அட்டைகள் உள்ளன.

தாமலேரிமுத்தூர் ஊராட்சி டி.வீரப்பள்ளி பகுதியில் உள்ள ரேஷன் கடையில் தமிழக அரசு வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்களை பொதுமக்களுக்கு வினியோகம் செய்யும் பணியை மாவட்ட கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தொடங்கி வைத்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் முருகேசன், நாட்டறம்பள்ளி தாசில்தார் க.குமார், தாமலேரிமுத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சுதா இளங்கோ, வருவாய் ஆய்வாளர் அன்னலட்சுமி, வட்ட வழங்கல் அலுவலர் ராமன், கூட்டுறவு சங்கம் செயலாளர் ஆனந்தன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story