கிருஷ்ணகிரியில் மாவட்ட செஸ் போட்டி
சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்குவதை முன்னிட்டு மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான செஸ் போட்டியை மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்.
சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்குவதை முன்னிட்டு மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான செஸ் போட்டியை மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்.
விளையாட்டு போட்டிகள்
மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி முதல் ஆகஸ்டு 10-ந் தேதி வரையில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு கடந்த 2 மற்றும் 15-ந் தேதிகளில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு செஸ் விளையாட்டு போட்டிகள் நடந்தன.
அதில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான செஸ் போட்டி கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதை மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) சி.முத்துமாரி தொடங்கி வைத்தார்.
விமானத்தில் பயணம்
மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.1000, கேடயம், 2-ம் பரிசாக ரூ.800 மற்றும் கேடயம், 3-ம் பரிசாக ரூ.500 மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை செஸ் போட்டியில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பெற்ற மாணவ- மாணவிகள் மாமல்லபுரத்தில் நடைபெறும் மாநில அளவில் நடைபெறும் போட்டி மற்றும் பயிற்சி முகாமில் கலந்து கொள்கிறார்கள்.
அதே போல 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை செஸ் போட்டியில் வெற்றி பெறும் மாணவ மாணவிகள் மாமல்லபுரத்தில் சர்வதேச அளவில் நடைபெறும் செஸ் போட்டியில் பார்வையாளர்களாக கலந்து கொள்கிறார்கள். மாமல்லபுரத்திற்கு செல்ல உள்ள மாணவ- மாணவர்களுக்கு பெங்களூரு - சென்னை, சென்னை - பெங்களூரு விமானத்தில் இலவசமாக அழைத்து செல்லப்படுகிறார்கள்.
நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கே.பி. மகேஸ்வரி, கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பரிதாநவாப், துணைதலைவர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, உடற்கல்வி ஆய்வாளர் வளர்மதி, பள்ளி தலைமையாசிரியர் சேரலாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.