தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள ஆஸ்பத்திரிகளில் விபத்தில் சிக்கியவர்களுக்கு முதல்-அமைச்சரின் விரிவான காப்பீடு அட்டை இல்லாவிட்டாலும் உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் அறிவுறுத்தி உள்ளார்.

x
தினத்தந்தி 28 Sept 2023 12:15 AM IST (Updated: 28 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள ஆஸ்பத்திரிகளில் விபத்தில் சிக்கியவர்களுக்கு முதல்-அமைச்சரின் விரிவான காப்பீடு அட்டை இல்லாவிட்டாலும் உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் அறிவுறுத்தி உள்ளார்.

தூத்துக்குடி

பாராட்டு சான்றிதழ்

முதல்-அமைச்சரின் விரிவான காப்பீடு திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் 5-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி சிறப்பாக பணியாற்றிய காப்பீடு திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆஸ்பத்திரி வார்டு மேலாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டி பேசினார்.

முகாம்கள்

அப்போது, தமிழ்நாட்டில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே சில மாநிலங்களில் தான் காப்பீட்டு திட்டம் உள்ளது. அதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக உள்ளது. மத்திய அரசும் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு அரசின் காப்பீட்டு திட்டம் மத்திய அரசின் காப்பீட்டு திட்டத்துடன் ஒருங்கிணைத்து செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம் தொடர்பாக மாதம் இரண்டு முகாம்கள் நடத்த வேண்டும். முகாம்களில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட அட்டை இல்லாதவர்களுக்கு வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள ஆஸ்பத்திரிகளில் விபத்தில் சிக்கியவர்களுக்கு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டஅட்டை இல்லையென்றாலும் உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும். மேலும், விபத்தில் சிக்கியவர்களுக்கு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட அடையாள அட்டை பெறுவதற்கும் ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று கூறினார்.

நிகழ்ச்சியில் சுகாதார பணிகள் இணை இயக்குநர் எஸ்.அகத்தியன், முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் மாவட்ட திட்ட அலுவலர் சுரேந்திரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story