குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் அனைத்து துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தி உள்ளார்.

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் அனைத்து துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தி உள்ளார்.
x
தினத்தந்தி 9 Oct 2023 6:45 PM GMT (Updated: 9 Oct 2023 6:45 PM GMT)

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் அனைத்து துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தி உள்ளார்.

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் அனைத்து துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தி உள்ளார்.

ஆலோசனை கூட்டம்

திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா முன்னேற்பாடு குறித்த அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி பேசினார். அப்போது, குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வருகிற 15-ந் தேதி காலை 9.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்வான சூரசம்காரம் 24.10.2023 அன்று இரவு 12 மணிக்கு நடக்கிறது. 25.10.2023 அன்று கொடியிறக்கம் நிகழ்ச்சி யுடன் திருவிழா நிறைவு பெறும்.

கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்க குடிநீர் வடிகால் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். குலசேகரன்பட்டினம் கிராமம் முழுவதும் சுகாதார முறையில் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் உபயோகத்துக்கு எல்லப்பன் நாயக்கன் குளத்துக்கு தண்ணீர் திறந்து விட தாமிரபரணி கோட்டம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மற்றும் குலசேகரபட்டினம் பஞ்சாயத்து மூலம் ஏற்பாடு செய்ய வேண்டும். விழா நாட்களில் தடையின்றி மின்சாரம் வினியோகம் செய்யப்பட வேண்டும். திருவிழா காலங்களில் தொற்று வியாதிகள் பரவாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். குலசேகரபட்டினம் பகுதியில் சேரும் குப்பைகளை அவ்வப்போது, அகற்ற பஞ்சாயத்து நிர்வாகம் உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். கோவில் வளாகத்தில் 24 மணி நேரமும் மருத்துவ குழு தயார் நிலையில் இருக்க வேண்டும்.

சிறப்பு பஸ்கள்

அரசு போக்குவரத்துறை மூலம் பல்வேறு வழிதடங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும். தென்னக ரெயில்வே மூலம் 9, 10 மற்றும் 11-ம் திருவிழா நாட்களில் (23.10.2023, 24.10.2023 மற்றும் 25.10.2023) திருச்செந்தூரில் இருந்து நெல்லை வழித்தடங்களில் கூடுதல் ரெயில்கள் இயக்கவும் மற்றும் சென்னை முதல் திருச்செந்தூர் வரை சிறப்பு ரெயில் இயக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தீயணைப்பு படையினர் கடலில் பாதுகாப்பு வளையத்துடன், உயிர்மீட்பு படகுடனும் பாதுகாப்பு பணிபுரியவும் மற்றும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறையினரை நீச்சல், கடலாள், முத்துகுழி பணியாளர்களுடன் பாதுகாப்பு பணிபுரியவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஒத்துழைப்பு

விழா நாட்கள் முழுவதும் பக்தர்களுக்கு போலீசார் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். முக்கிய விழா நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால், விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். பஞ்சாயத்து மூலம் திருவிழாவுக்கு முன்பு பழுதடைந்த சாலைகளை பழுதுநீக்கம் செய்ய வேண்டும். தெருவிளக்குகள் அனைத்தும் நன்கு இயங்குவதற்கு உரியநடவடிக்கைகள் எடுக்க வேண்டும். சாலைகளில் இரு பக்கத்திலும் உள்ள உடைமரங்கள் வெட்டுதல் சிறப்பாக நடைபெற அனைத்து துறை அலுவலர்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய்சீனிவாசன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story