மாவட்டக்குழு கூட்டம்
தமிழ்நாடு ஜெனரல் எம்ப்ளாய்ஸ் யூனியன் தேனி மாவட்டக்குழு கூட்டம் தேனியில் நடந்தது.
தேனி
தமிழ்நாடு ஜெனரல் எம்ப்ளாய்ஸ் யூனியன் தேனி மாவட்டக்குழு கூட்டம் தேனியில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் சரவணக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் கமலக்கண்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் ராசதுரை வேலை அறிக்கையை முன்வைத்துப் பேசினார். கூட்டத்தில், தொழிலாளர் நலன்களுக்கு எதிரான மத்திய அரசின் 4 தொழிலாளர் சட்ட தொகுப்பினை திரும்பப் பெற வேண்டும். தொழிலாளர் நலவாரியங்களை முடக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும். மின்சாரத் திருத்த சட்ட மசோதாவை கைவிடவேண்டும். நகரங்கள் மற்றும் கிராமங்களின் வளர்ச்சிக்கு ஏற்றாற்போல் தூய்மைப் பணியாளர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Related Tags :
Next Story