இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட குழு கூட்டம்
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட குழு கூட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட குழு கூட்டம் புதுக்கோட்டை கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட குழு உறுப்பினர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநில செயலாளர் முத்தரசன், மாநில செயற்குழு உறுப்பினர் சந்தானம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் செங்கோடன் எதிர்கால வேலைகள் குறித்து பேசினார். வருகிற ஆகஸ்டு மாதம் 9-ந் தேதி திருப்பூரில் நடைபெறும் மாநில மாநாட்டு பேரணியில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து 2 ஆயிரம் பேர் கலை நிகழ்ச்சிகளோடு, செஞ்சட்டை அணிந்து சிறப்பாக பங்கேற்பது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Related Tags :
Next Story