மாவட்ட கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு


மாவட்ட கிரிக்கெட் போட்டியில்  வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
x
தினத்தந்தி 2 Nov 2022 12:15 AM IST (Updated: 2 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தட்டார்மங்கலம் அருகே மாவட்ட கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

தட்டார்மடம்:

தட்டார்மடம் அருகே உள்ள பொத்தகாலன்விளை செயிண்ட் மேரீஸ் ஸ்போர்ட் கிளப் சார்பில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது. இதில் சாத்தான்குளம், உடன்குடி, தட்டார்மடம், பொத்தகாலன்விளை, முதலூர், மெய்யூர், நரையன்குடியிருப்பு, மணிநகர் உள்ளிட்ட 32 அணிகள் கலந்து கொண்டன.

இறுதிபோட்டியில் சாத்தான்குளம் நேதாஜி ஸ்போர்ட்ஸ் கிளப் அணியை எதிர்த்து உடன்குடி டேஞ்சர் பாய்ஸ் அணியினர் மோதினர். இதில் உடன்குடி அணி வெற்றி பெற்று முதல் பரிசு பெற்றது. 2-ம் பரிசை சாத்தான்குளம் நேதாஜி ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும், உவரி செல்வமாதா அணியினர் 3-ம் பரிசை, பொத்தகாலன்விளை செயிண்ட் மேரிஸ் ஸ்போர்ட் கிளப் அணியும் தட்டிச் சென்றது.

பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவுக்கு சாத்தான்குளம் தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் லூர்துமணி தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் சுரேஷ், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் செயலர் வர்க்கீஸ், மாவட்ட கவுன்சிலர் தேவவிண்ணரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளப் ஒருங்கிணைப்பாளர் கிளிண்டன் வரவேற்றார். இதில் முதல் பரிசு பெற்ற உடன்குடி அணிக்கு ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் எம்.எல்.ஏ. வழங்கிய ரூ.10,001 மற்றும் சுழற்கோப்பை வழங்கப்பட்டது. 2-ம் பரிசாக பெற்ற சாத்தான்குளம் அணிக்கு ரூ.6001 மற்றும் சுழற்கோப்பையும், 3-வது பரிசாக உவரி அணிக்கு ரூ.3001-ம், 4-ம் பரிசாக பொத்தகாலன்விளை அணிக்கு ரூ.1001-ம் வழங்கப்பட்டது. சிறந்த ஆட்டகாரராக தேர்வு பெற்ற வீரர்கள் விவேகானந்தன், ராபின ்மனோஜ், அஜிஸ் ஆகியோருக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.


Next Story